மாவட்ட செய்திகள்

தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் நியமனம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் நியமனம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் தபால் ஆயுள் காப்பீடு, கிராம தபால் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பதுடன் 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்கள், சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம். கணினி பயிற்சி, ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், சென்னை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதர காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை. விருப்பமுள்ளவர்கள் dopliccc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை குறிப்பிட்டு, கல்வி சான்றிதழ், வயது மற்றும் முகவரி சான்றுகளின் நகல்களை இணைத்து வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் மு.ஸ்ரீராமன் தெரிவித்து உள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?