ஆரணி,
ஆரணியை அடுத்த ஆரணிபாளையம் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆற்காடு பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நேற்று ஊருக்கு வந்திருந்த அவர் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு சென்றுவிட்டு மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் ஆரணிக்கு வந்து கொண்டிருந்தார். ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே வரும்போது எதிரே வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.