மாவட்ட செய்திகள்

கிண்டி மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்; வாலிபர் கைது

கிண்டி மேம்பாலத்தில் கார் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போகலூரை சேர்ந்தவர் அப்ரின்கான் (வயது 26). இவர், துபாயில் இருந்து வரும் தனது உறவினரை அழைத்துச்செல்ல மற்றொரு உறவினர் சையத் என்பவருடன் இ-பதிவு செய்து காரில் சென்னை வந்தார். விமானம் மதியம்தான் வரும் என்பதால் இருவரும் காரில் மண்ணடி சென்றனர். கிண்டி மேம்பாலத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த அப்ரின்கானின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. நல்லவேளையாக காரில் இருந்த 2 பேரும் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார், சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உறவினரை அழைத்துச்செல்ல இரவு நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து காரில் வந்ததால் தூக்க கலக்கத்தில் காரை கவனக்குறைவாக ஓட்டி அரசு சொத்துகளை சேதப்படுத்தியதாக அப்ரின்கானை கைது செய்தனர். அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்