மாவட்ட செய்திகள்

கார்கள் நேருக்கு நேர் மோதல்

கார்கள் நேருக்கு நேர் மோதல்

தினத்தந்தி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கிருஷ்ணாபுதூரை சேர்ந்தவர் கண்ணன்(வயது 27). இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடன், முரளி(21) மற்றும் சாந்தி(37) ஆகியோரும் சென்றனர். காரை கண்ணன் ஓட்டினார். பாண்டியன் பூங்கா அருகே எதிரே வந்த மற்றொரு கார் மீது கண்ணன் ஓட்டி சென்ற கார் நேருக்கு நேராக மோதியது. அப்போது பின்னால் வந்த வேறொரு காரும், கண்ணன் ஓட்டி வந்த காரின் பின்புறத்தில் மோதி நின்றது. இதில் கார்களின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் கார்களில் வந்த கண்ணன், முரளி, சாந்தி மற்றும் தும்பூரை சேர்ந்த கார்த்திக்(31) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கருப்புசாமி, மாதன் தலைமையில் வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கண்ணன் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்