மாவட்ட செய்திகள்

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 28). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான இவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர், சென்னை துறைமுக பொறுப்பு கழக குடியிருப்பு வளாகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் 2 பேருடன் சேர்ந்து தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு சக வீரர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த மகேந்திரகுமார், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்