சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் குறள் செல்வி (வயது 52). இவர் சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தனி அலுவலராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு டீச்சர்ஸ் காலனி பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து குறள் செல்வி புழல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேர்தல் அதிகாரியிடம் கைவரிசை காட்டிய திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.