மாவட்ட செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் குழந்தையிடம் தங்க வளையலை பறிக்க முயன்றவர் கைது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் குழந்தையிடம் 1 பவுன் வளையலை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மணவாளக்குறிச்சி.

கருங்கல் பூட்டேற்றி ஒளிப்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி கமலபாய் (வயது 55). நேற்று முன்தினம் மாலை கமலபாய் தனது மகள் மற்றும் பேத்தி, உறவினர்களுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஆனி மாத கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் கமலபாயின் பேத்தி கையில் அணிந்திருந்த 1 பவுன் வளையலை பறிக்க முயன்றார். இதை கண்ட பொதுமக்கள் மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவரை பொதுமக்கள் மண்டைக்காடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பொற்றையடி அருகே வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பதும், கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தையிடம் நகையை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்