மாவட்ட செய்திகள்

துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் : மும்பை மாநகராட்சி நடவடிக்கை

வேலையில் அலட்சியமாக இருந்த துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை மாநகராட்சி ஏ வார்டு மெரின்லைன் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் மெரின்லைன் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மேற்பார்வையாளர் உள்பட துப்புரவு பணியாளர்கள் 14 பேர் வருகை பதிவேட்டில் கையொப்பம் போட்டு விட்டு தெருக்களை சுத்தம் செய்யாமல் பணியில் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், துப்புரவு பணி மேற்பார்வையாளர் உள்பட 14 பேரையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்