மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை த.மு.மு.க.வினர் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தை த.மு.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தென்காசி,

தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் பல ஆண்டுகளாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு மின்சார வசதி, குடிநீர் வசதி கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தென்காசியில் புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தென்காசி நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தை த.மு.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தென்காசி நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஷெரீப், மாவட்ட தலைவர் கோகர் ஜான் ஜமால், செயலாளர் கொலம்பஸ் மீரான், துணைச் செயலாளர் சலீம், மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், அச்சன்புதூர் ரஜாய், பொருளாளர் வடகரை துரை, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் காமில் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து சென்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி