மாவட்ட செய்திகள்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

செக்கானூரணி,

பஸ்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப்பெற கோரியும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முன்பு அந்த கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மதுரை-தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த மறியல், ஆர்ப்பாட்டத்தால் மதுரை-தேனி சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. இதனால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேற்கு தாசில்தார் பாலாஜி, கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் சத்தியேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், துணை தலைவர் ராஜா ரஹீம், நகர செயலாளர் மகேஸ்வரன் உள்பட மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில துணை பொது செயலாளர் கிட்டு சிறப்புரையாற்றினார். முடிவில் நகர தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு