தேனி:
தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஜீவிதா வரவேற்றார்.
தென்னிந்திய பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். விழாவில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகந்தி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில், கல்லூரி செயலாளர் தில்லைக்கனி, இணைச்செயலாளர் காமராஜ், கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியை ஜெசி பிருந்தாமேரி நன்றி கூறினார்.