மாவட்ட செய்திகள்

சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட சித்தராமையா வருகிற 20-ந்தேதி வேட்புமனு தாக்கல்

சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட முதல்-மந்திரி சித்தராமையா வருகிற 20-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தினத்தந்தி

மைசூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா காங்கிரஸ் கட்சி சார்பில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வந்த அவர், அங்கு 4 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமல்லாது தனது மகன் போட்டியிடும் வருணா தொகுதிக்கும் சென்று சித்தராமையா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவதற்காக, வருகிற 20-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவர், மைசூரு தாலுகா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

முதல்-மந்திரி சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்திலேயே, சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளருமான ஜி.டி.தேவேகவுடாவும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இருவரும் ஒரே நாளில் மைசூரு தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்