கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி மேற்கொள்வதாக கூறி தமிழகம் முழுவதும் காங்கிரசார் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் தலைமை தாங்கினார்.