மாவட்ட செய்திகள்

பெங்களூருவுக்காக காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழில் அதிபர்களுக்காக தயாரிக்கப்பட்டது

பெங்களூருவுக்காக காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழில் அதிபர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்று முரளிதரராவ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவுக்காக காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழில் அதிபர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்று முரளிதரராவ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழில் அதிபர்களை...

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி பெங்களூரு மாநகருக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு உள்ளது. அதில் பெங்களூரு நகரில் சர்வதேச அளவில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். இது ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழில் அதிபர்களை சந்தோஷப்படுத்த தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தான் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.

அவர் தான் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழில் அதிபர்களை கவருவதற்காக தயாரித்து இருக்கலாம். ஏனெனில் பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ஆவார். ஆனால் பெங்களூருவில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை.

மன்னிப்பு கேட்க வேண்டும்

அதுபோல, கர்நாடகத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் வேலை வாய்ப்பை எப்படி உருவாக்குவோம், எந்தெந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் தொழில் தொடங்க போகிறது என்பது பற்றி தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. இந்த பொய் வாக்குறுதிகளை பார்த்து இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள்.

இவ்வாறு முரளிதரராவ் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்