மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

நெற்குன்றத்தில் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி நடக்க இருப்பத்தால் அம்பத்தூரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னையை அடுத்து உள்ள நெற்குன்றத்தில் 500 மில்லி மீட்டர் விட்டமுள்ள குடிநீர் குழாய் அருகில் உள்ள 1,900 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. பணிக்காக நெற்குன்றம் வி.ஜி.பி. அமுதா மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் வால்வு மூடப்படுகிறது. இதனால், அம்பத்தூர் வார்டு எண்.87 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள அம்பத்தூர் பகுதி பொறியாளர் செல்போன் எண்.81449-30907 தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்