மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே மணலி புதுநகரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1980-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிலங்களை கையகப்படுத்தி குடியிருப்பு மனைகளில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகிறது. மணலி புதுநகர் பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த நிலத்தை கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தி குடிசை மாற்று வாரியத்திற்கு நலிவுற்ற பிரிவினருக்காக வீடு கட்டும் திட்டத்திற்காக இட உரிமை மாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து குடிசை மாற்று வாரியம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடங்க டெண்டர் விடப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தினர் பணிகளை தொடங்கினர்.