மாவட்ட செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் பயிற்சி டாக்டர் உள்பட 22 பேருக்கு கொரோனா

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பயிற்சி டாக்டர் உள்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

11 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வரும் ஒருவரும் அடங்குவார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாளையங்காட்டை புறநகர் பகுதியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

13 பேர் குணமடைந்தனர்

நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 891 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று மட்டும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 127 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 211 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 8 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 40பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 158 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 18 ஆக உள்ளது. இதில் 15 ஆயிரத்து 797 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 80 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை