மாவட்ட செய்திகள்

கோவையில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு தொற்று உறுதியானது.

தினத்தந்தி

கோவை,

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில 50-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 624 ஆக உயர்ந்தது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 55 ஆயிரத்து 490 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 448 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றுக்கு உயிர் பலி எதுவும் இல்லை.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்