மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம்

காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ சிகிச்சை வழங்க காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் பெருநகராட்சிக்கு சொந்தமாக உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

அவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண மண்டபம் அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் ரெயில்வே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதி மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு