மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி‌ 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி‌ 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர் 54 வயதானவர். இவர் கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சீபுரம் செட்டியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் 2 மணியளவில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காஞசீபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொரானா தொற்று காரணமாக அவர் நேற்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இநதநிலையில் இது போன்ற முடிவு எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்