மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

தி.மு.க. எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

தினத்தந்தி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஏ.நல்லதம்பி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு கொரோனா தாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருப்பத்தூர் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்குமாறும் அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு வெளியே செல்லக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்