படம் 
மாவட்ட செய்திகள்

சிவசேனா மந்திரி, எம்.பி.க்கு கொரோனா

சிவசேனா மூத்த தலைவரும், நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டே, அரவிந்த் சாவந்த் எம்.பிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

சிவசேனா மூத்த தலைவரும், நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டே, அரவிந்த் சாவந்த் எம்.பிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் அரசியல் தலைவர்களும், சினிமா உலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மராட்டிய மந்திரிகள் வர்ஷா கெய்க்வாட், பாலாசாகேப் தோரட், யஷோமதி தாக்குர் மற்றும் பல எம்.எல்.ஏ.க்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் இதுவரை 10 மந்திரிகள், 20 எம்.எல்.ஏ.க்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியிருந்தார்.

சிவசேனா மந்திரி

இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவரும், நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களின் ஆசிர்வாதத்தால், விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன். மக்களுக்கு சேவை ஆற்றுவேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்கவும்" என கூறியுள்ளார்.

மந்திரி ஏக்னாத் ஷிண்டே நோய் தொற்றால் பாதிக்கப்படுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டிலும் அவர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அரவிந்த் சாவந்த் எம்.பி.

இதேபோல சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் டுவிட்டர் பதிவில், எனக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அரவிந்த் சாவந்த் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர். மராட்டியத்தில் பா.ஜனதா உறவை சிவசேனா முறித்து கொண்டதை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்தில் நேற்று முன்தினம் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

------------------

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்