மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்: வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொடர்புடைய வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் ஐ.டி.ஐ. வரை படித்து விட்டு வேலைதேடி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவருடன் தொடர் பில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் தன் வீட்டிற்கு சரிவர செல்லாமல் கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை சதீஷ்குமாரின் பெற்றோர் கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலையின் காரணமாக வெளியே சென்றார். பின்னர் அவர் திருநின்றவூர்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சதீஷ்குமாரின் தந்தை ராஜா தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் திருவள்ளூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு