மாவட்ட செய்திகள்

தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

குடும்ப பிரச்சினை

திருவண்ணாமலை அருகே உள்ள வடமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அனுசுயா (23). இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் அனுசுயா தற்போது 7 மாத கர்ப்பிணி என்று கூறப்படுகிறது. நேற்று காலை கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த அனுசியா நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அனுசுயாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையில் இருந்த மணிகண்டன் அந்த பகுதியில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் தூக்கில் தொங்கினார்.

அவரை மீட்டு பெரியகுளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் அவரது உடலும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாத்தூர் பகுதியில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு