மாவட்ட செய்திகள்

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் தடுப்புச்சுவர் மீது மின்சார ரெயில் மோதியதால் பரபரப்பு

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் தடுப்புச்சுவர் மீது மின்சார ரெயில் மோதியதால் பரபரப்பு உண்டானது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் தலைமை அலுவலகமான சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்திற்குள் 3-ம் எண் பிளாட்பாரத்தில் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகள் இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

ஆனால் மின்சார ரெயில் நிற்காமல், நேராக தண்டவாள முடிவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. அப்போது ரெயில் பெட்டிகள் குலுங்கின. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரெயில் நின்றதும் அவர்கள் பதறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். ரெயில் மெதுவாக வந்து தடுப்புச்சுவர் மீது மோதியதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாதவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தடுப்புச்சுவர் மீது மின்சார ரெயில் மோதிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை