மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்ட கூடைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கடலூர் மாவட்ட கூடைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் கடலூரில் நடந்தது.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்ட கூடைப்பந்து சங்க புதிய தலைவராக அருளானந்தம், புதிய செயலாளராக வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், புதிய பொருளாளராக பாலமுரளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணைத்தலைவர்களாக இளங்கோவன், நடராஜன், ஹரிப்பிரியா, அருள், இணை செயலாளர்களாக சிட்டிபாபு, செல்வராஜ், சகாயச்செல்வன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் சங்க தலைவர் அருளானந்தம் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நிர்வாகிகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

மூத்த துணைத்தலைவர் பி.எம்.ஜே. இளங்கோவன் புதிய நிர்வாகிகள் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கி பேசினார்.சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூடைப்பந்து சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களை ஊக்குவிப்பது குறித்து புதிய நிர்வாகிகளிடம் கலந்தாலோசனை நடத்திய சங்க செயலாளர் ஆர்.விஜயசுந்தரம் கூறுகையில், கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. விரைவில் மாநில சங்கம் அனுமதியுடன் கடலூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க பொருளாளர் பாலமுரளி செய்திருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்