இதற்காக சாரம் அமைத்து அதில் நின்றபடி பெயிண்ட் அடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இதனால் செல்வம், ஜான் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த செல்வம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஜான், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.