கணினி சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த பார்க்கிங் வசதி செயல்படுவதால் தற்சமயம் 2 ஊழியர்களை கொண்டு தற்காலிகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பார்க்கிங்கை ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக்கொண்டு செயல்படுத்த நேர்காணல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பண பரிவத்தனை தொடர்பான பணியை மேற்கொள்வதில்லை என தெரிவித்ததால் ரெயில்வே பணியாளர் களைக் கொண்டே தற்சமயம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பார்க்கிங் தனியார்மூலம் பராமரிக்க டென்டர்கள் கோரப்பட்டுள்ளன. வருகிற மே மாதத்தில் இந்த டென்டர்கள் இறுதி செய்யப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. தற்போது ஒரு ஷிப்டுக்கு 2 ஊழியர்கள் என ஒரு நாளைக்கு 6 ஊழியர்கள் சுழற்சி முறையில் பார்க்கிங் இடத்தில் பணிசெய்து வருகின்றனர். மேலும் இங்கு கழிவறை மற்றும் மேற்கூரை வசதி வரும் நாட்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை ரெயில்வே கோட்டம் அதிகாரி தெரிவித்தார்.