மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் பள்ளிகளுக்கு 10-ந் தேதி வரை தீபாவளி விடுமுறை

மராட்டியத்தில் தீபாவளியையொட்டி மாநில பள்ளி கல்வித்துறை இன்று முதல் 10-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 1 ஆண்டுகளாக மூடப்பட்ட இருந்த பள்ளிகள் இந்த மாத தொடக்கத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது நகரில் 8-ம் வகுப்பு முதலும், கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு முதலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் நேரடி வகுப்பில் சென்று கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது .

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மராட்டியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி வரையில் பள்ளுகளுக்கு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெறாது. அதுமட்டும் இன்றி ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்