மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மேலப்பிடாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

பெட்ரோல்-டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.விவசாய சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் வெங்கட்ராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராமலிங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை