மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்

திருவள்ளூரில் அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீ தேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.அப்போது பூஜை பொருட்களுடன் பக்தர்கள் வந்த நிலையில், சாமிக்கு அர்ச்சனை எதுவும் செய்யப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதன் காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவு வாயில் முன்பு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரிக்கரையில் பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?