இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் கணக்கெடுப்பு, சுகாதார ஆய்வாளர்களின் வார்டு அலுவலகம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மருத்துவ முகாம், தடுப்பூசி முகாம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அப்பகுதியில் உள்ள உரக்கிடங்கு ஆகிய இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது ஆவடி மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், நல அலுவலர் டாக்டர் முகமது அசின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.