மாவட்ட செய்திகள்

காட்டு பன்றிகளின் தொல்லை: மக்காச்சோள வயலை சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பெண் சாவு

காட்டு பன்றிகளின் தொல்லை காரணமாக மக்காச்சோள வயலை சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டை தாலுகா கீழமங்கலம் அருகே புதூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பழனியம்மாள்(வயது 40). இவர் பெரம்பலூர் மாவட்டம், எசனை கீழக்கரை ரெட்டைமலை சந்தில் உள்ள பாளையத்தை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து, அங்கேயே தங்கியிருந்து கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் பார்த்து வந்தார்.

தற்போது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். மேலும் அவர் வயலில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகம் இருப்பதால், வயலில் பயிரிட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்காச்சோள வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். வழக்கம் போல் நேற்று காலை பழனியம்மாள் மேய்ச்சலுக்காக மாடுகளை காட்டிற்கு அழைத்து சென்று கட்டி போட்டு விட்டு மீண்டும் வயலுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மக்காச்சோளவயலை சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் பழனியம்மாளின் கை சிக்கியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் போலீசார் மின்வேலியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தினை துண்டித்து விட்டு, பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு