மாவட்ட செய்திகள்

மார்வே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

மார்வே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை மலாடு மால்வாணி, ஆஷ்மி நகரை சோந்த சிறுவர்கள் 6 பேர் நேற்று முன்தினம் மாலை மார்வே கடற்கரை பகுதிக்கு சென்றனா. பின்னர் அவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது அடித்த ராட்சத அலை ஆழமான பகுதியில் நின்று குளித்து கொண்டு இருந்த 2 சிறுவர்களை சுருட்டி இழுத்து சென்றது. அவர்கள் 2 பேரும் கடலில் மாயமானார்கள்.

இதையடுத்து மற்ற 4 சிறுவர்களும் உதவி கேட்டு சத்தம் போட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மால்வாணி போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர்.

உடல்கள் மீட்பு

இந்தநிலையில் அன்று இரவு 8 மணி அளவில் மாயமான அஸ்ரப் முகமது அலி (13) என்ற சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். மற்றொரு 16 வயது சிறுவனின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்