மாவட்ட செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

தினத்தந்தி

குழித்துறை,

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைத்தம்பி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பப்புசன், துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், பைங்குளம் பேரூர் செயலாளர் அம்சி நடராஜன், மாநில சட்டத்துறை துணை செயலாளர் தினேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் லாரன்ஸ், காங்கிரஸ் மாநில குழு உறுப்பினர்கள் டாக்டர் தம்பி விஜயகுமார், எம்.ஏ.கான், குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், நகர ம.தி.மு.க செயலாளர் ஜெயராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ஆசாத் அலி, ராஜு, மரிய சிசுகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்