மாவட்ட செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் சதாசிவம், ஸ்டாலின், மதியழகன், பிராங்கிளின், லிவிங்ஸ்டன், உதயகுமார், குட்டிராஜன், பசலியான், சேக்தாவூது, பெஞ்சமின், சிவராஜ், சாகுல் ஹமீது, எம்.ஜே.ராஜன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்