மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே புலிவலத்தில் இன்று நடக்கிறது தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

திருவாரூர் அருகே புலிவலத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை மு.க. மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

திருவாரூர்,

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற மூன்று முழுக்கங்களை முன்வைத்து கடந்த 3ந் தேதி முதல் பிப்ரவரி 10ந் தேதி வரை 12,617 ஊராட்சிகளும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 2ந் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் ஊராட்சி தி.மு.க. சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கி பிப்ரவரி மாதம் 17ந் தேதி வரை நடைபெறும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.


திருவாரூரில் நடைபெறும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு இன்று (புதன்கிழமை) காலை திருவாரூர் வருகிறார். ரெயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு செல்கிறார். அங்கிருந்து காலை 8 மணிக்கு புறபட்டு திருவாரூர் அருகே உள்ள புலிவலம் வில்வனப்படுகை செல்கிறார். அங்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். மதியம் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு செல்கிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்