மாவட்ட செய்திகள்

வாலாஜாபாத் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

வாலாஜாபாத் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் போனது.

இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற செயலாளரிடமும், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் நல்லூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுநாள் வரை மேற்கொள்ளப்படவில்லை.

கோரிக்கை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த வழியாக சென்று வருவதால் குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பழுதடைந்த நிலையில் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லூர் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்