மாவட்ட செய்திகள்

10 இடங்களில் இருந்து போதை தடுப்பு விழிப்புணர்வு ஜோதி நாகர்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது

மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் இருந்து போதை தடுப்பு விழிப்புணர்வு ஜோதி நாகர்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு தினவிழாவில் நீதிபதி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

உலக போதை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெற்றது. பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமை தாங்கினார். ஜோதி ஓட்டத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயராக தேர்வு செய்யப்பட்டுள்ள நசரேன் சூசை, கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குதந்தை ஜோசப் ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் ஜெனிஸ், கிளாட்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னமுட்டம் சிறில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், பொற்றையடி, சுசீந்திரம், வழியாக நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியை சென்றடைந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

குளச்சல் ஆரல்வாய்மொழி

குளச்சல் காணிக்கை மாதா அருட்சகோதரிகள் புதுவாழ்வு இல்லம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடந்தது. நிகழ்ச்சியை குளச்சல் வட்டார முதன்மை பணியாளர் செர்வாசிஸ் தொடங்கி வைத்தார். ஜோதி ஓட்டம் குளச்சலில் இருந்து தொடங்கி கொட்டில்பாடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியை சென்றடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் இருந்தும் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடந்தது. ஆரல்வாய்மொழி வட்டார இயக்குனர் பெர்பெக்சுவல் ஆன்றனி தலைமை தாங்கினார். பங்குத்தந்தை ஸ்டீபன், பங்குப்பேரவை துணைத்தலைவர் பயஸ்ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விழிப்புணர்வு தின ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். தேவசகாயம் மவுண்டை சுற்றி வந்த ஜோதி ஓட்டம் பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியை வந்தடைந்தது.

இதுபோல், சுங்கான்கடை, முட்டம், எட்டாமடை, இனையம், ஆலஞ்சி, கார்மல்நகர், குறும்பனை ஆகிய பகுதிகளில் இருந்தும் விழிப்புணர்வு ஜோதி ஓட்டங்கள் தொடங்கி நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியை சென்றடைந்தது. அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நீதிபதி போலீஸ் சூப்பிரண்டு

விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தில் எடுத்துவரப்பட்ட ஜோதியை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பெற்றுக்கொண்டார். திருவள்ளூர் மாவட்ட நீதிபதி சுபாஷினி, கோட்டார் மறைமாவட்ட ஆயராக தேர்வு செய்யப்பட்டுள்ள நசரேன் சூசை, மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர், அருட்பணியாளர்கள் பிரான்சிஸ் சேவியர் நெல்சன், ஆன்றனி அல்காந்தர், அருட்சகோதரி ஜோஸ்பின், சகாய பிராங்கோ, போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் விழிப்புணர்வு புத்தகம், விழிப்புணர்வு குறுந்தகடு ஆகியவை வெளியிடப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை ஆற்றுப்படுத்துதல் பணி, போதை நோய் நலப்பணி, ஏசு சபை போதை நோய் பணிக்குழு, காணிக்கை மாதா புதுவாழ்வு இல்லம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.

என்.சி.சி. பேரணி

உலக போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. சார்பில் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு 11வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் பிரமோத் வழிகாட்டுதலின்படி, பள்ளித்தலைமையாசிரியர் ராபர்ட், பள்ளி தாளாளர் செல்வின் கனகரோஸ் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியின்போது போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், ஆபத்துகள் குறித்த துண்டு பிரசுரங்களை என்.சி.சி. மாணவர்கள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் என்.சி.சி. முதன்மை அதிகாரி ரசல்ராஜ் செய்திருந்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்