மாவட்ட செய்திகள்

கட்டுமான பணியின்போது 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

கட்டுமான பணியின்போது, 7-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து கட்டிடத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆவடி,

பீகார் மாநிலம் சபூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் (வயது 22). கட்டிடத்தொழிலாளியான இவர், கடந்த 3 மாதங்களாக திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். சகதொழிலாளர்களுடன் அவர் அங்கேயே தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தின் 7-வது மாடியில் அவர், சக தொழிலாளர்களுடன் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சையத், 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது மண்டை உடைந்து, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், பலியான சையத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை