மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி,

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக தற்போதைய தமிழக முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதனை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் சந்தனம் தலைமையில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

தொடர்ந்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை அருகே, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே, 1-ம் கேட் காந்தி சிலை, 2-ம் கேட், சிவன்கோவில் தேரடி, புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை ரோடு, காய்கனி மார்க்கெட் சிக்னல் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஞானபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாயர்புரம்- உடன்குடி

சாயர்புரம் மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

உடன்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு உடன்குடி நகர செயலாளர் சந்தையடியூர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் உடன்குடி ஒன்றிய அவைத்தலைவர் மகாராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் குணசேகரன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் சங்கரலிங்கம், மாதவன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆறுமுகநேரி- காயல்பட்டினம்

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

ஆத்தூர் மெயின் பஜாரில் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் அண்ணாமலை, சுப்பிரமணியம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினத்தில் புதிய பஸ்நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர அ.தி.மு.க. செயலாளர் காயல் மவுலானா தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.

திருச்செந்தூர்-ஆழ்வார்திருநகரி

திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சுதர்சன், வடமலைபாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தென்திருப்பேரையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராஜநாராயணன், நகர செயலாளர் ஆறுமுகநயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு- ஸ்ரீவைகுண்டம்

கயத்தாறில் ஒன்றிய செயலாளர் வினோத் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கயத்தாறு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கீழ பஜார் ஆகிய இடங்களில் வெடி வெடித்து கொண்டாடினர். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் குருராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆறுமுகம் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம் மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் பஸ்நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பராக்கிரமபாண்டி பஞ்சாயத்து தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் திருப்பாற்கடல், தெற்கு மாவட்ட பொதுக் குழு உறுப்பினரும், ஆழ்வார் கற்குளம் கூட்டுறவு வங்கி தலைவருமான அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார். முறப்பநாடு புதுகிராமம் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் மற்றும் பலர் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்