மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி

அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூச்சிக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கிடு (வயது 55). இவர் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெயமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை அந்தப்பகுதியில் திடீரென மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனை சரிசெய்ய வெங்கிடு அந்தப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றார். பின்னர் அவர் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது வெங்கிடுவை திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று வெங்கிடுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வெங்கிடுவின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்