மாவட்ட செய்திகள்

மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

மின்வாரிய ஊழியர்களுக்கு இறுதி செய்யப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., என்.எல்.ஓ., டி.என்.பி.இ.ஓ. உள்பட 9 சங்கங்களின் தொழிலாளர்கள் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்(சி.ஐ.டி.யு.) தலைமை தாங்கினார். இதில் பி.எம்.எஸ். அகில இந்திய துணை பொதுச்செயலாளர் முரளிகிருஷ்ணன், என்.எல்.ஓ. பொதுச்செயலாளர் சாலமோன், டி.என்.பி.இ.ஓ. பொதுச்செயலாளர் அருள்செல்வன், டி.எம்.டி.எஸ். பொதுச்செயலாளர் காளிராஜன் உள்பட 9 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதி செய்யப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்