மாவட்ட செய்திகள்

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்த வன அதிகாரியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

கர்நாடகாவில் யானை தாக்கி உயிர் இழந்த வன அதிகாரியின் உடல் கம்பத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கலெக்டரும் அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

கம்பம்,

கம்பம் கொண்டித்தொழுவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வனத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் இவர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள நாகரஒலே புலிகள் காப்பகத்தில் கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் இவர் டி.பி.குப்பே வனச்சரகத்திற்கு உட்பட்ட தாட்டி உண்டிகெரே பகுதியில் கபினி அணை அருகே காட்டு தீயை அணைக்க வனத்துறையினருடன் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டுயானை தாக்கியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இதையொட்டி அவருடைய உடலை மைசூரு எச்.டி.அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து நேற்று முன்தினம் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவருடைய உடல் சொந்த ஊரான கம்பத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலையில் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மணிகண்டனின் மனைவி சங்கீதாவிற்கும், அவரது குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து பெங்களூரு கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி சுபாஷ் மால்கரே தலைமையில் வனத்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மதுரை மண்டல வன பாதுகாவலர் ராஜேஸ்ஜெகனியா தலைமையில் வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், கர்நாடகா, ஒடிசா, கேரளா மாநிலங்களை சேர்ந்த வனத்துறை உயர் அதிகாரிகள், கொடைக்கானல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனத்துறையினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிக்குமார் தலைமையில் கம்பம் தொட்டன்துறை சுருளிப்பட்டி அருகேயுள்ள சுடுகாட்டிற்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தி மூலம் மணிகண்டனின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களின் சமுதாயமுறைப்படி மணிகண்டன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்