மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்துகோவில் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வேலன் முன்னிலை வகித்தார். இதில் கோவில் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில் சொத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் மாற்று மதத்தினரை வெளியேற்ற வேண்டும். இந்து கோவில்களின் சொத்துகளை அனுபவிக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோவில் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்