மாவட்ட செய்திகள்

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மறுநாளில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திங்கள்சந்தை,

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மறுநாளில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

என்ஜினீயர்

வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் லூக்காஸ். இவருடைய மகன் கிறிஸ்டோ செபாஸ்டின் (வயது 31). என்ஜினீயரான இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கிறிஸ்டோ செபாஸ்டினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 23-ந்தேதி கிறிஸ்டோ செபாஸ்டின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றிருந்தனர். வீட்டில் கிறிஸ்டோ செபாஸ்டின் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினர். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் பின்பக்க வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கிறிஸ்டோ செபாஸ்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கிறிஸ்டோ செபாஸ்டின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

பின்னர் இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மறுநாளில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்