மாவட்ட செய்திகள்

சென்னிமலையில் விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை

சென்னிமலையில் விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் சாமியப்பன். இவருடைய மகன் ரகுபதி (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரி.இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் ரகுபதியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தரக்கோரி சாமியப்பன் சென்னிமலை போலீசில் புகார் அளித்தார்.

விஷம் குடித்து...

இந்தநிலையில் ரகுபதியின் மோட்டார்சைக்கிள் சென்னிமலை அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தில் ரோட்டோரத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, அருகே இருந்த கரும்பு தோட்டத்தில் ரகுபதி விஷம் குடித்த நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

பெண் தர மறுப்பு

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ரகுபதி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததும், ஆனால் பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்கு பெண்தர மறுத்ததும், இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த ரகுபதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்