மாவட்ட செய்திகள்

வாகன சோதனையை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், குன்னம் வழியாக செல்லும் வாகனங்களை பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 அமலுக்கு வந்துள்ளதையொட்டி, அரியலூர் மாவட்டம், குன்னம் வழியாக செல்லும் வாகனங்களை பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதனை சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் துர்காதத் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், குன்னம் வழியாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் துரிதமாக சோதனை செய்து, வாகனத்தில் செல்லுபவர்களுக்கு இடையூறாக இல்லாமல் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 வீதம் 18 பறக்கும் படைக்குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன், போலீசார் மற்றும் அலுவலர்கள் உடன்இருந்தனர்.

இதேபோல் குன்னம் பஸ் நிலையத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனையும் தேர்தல் செலவின பார்வையாளர் பார்வையிட்டார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை