மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு

வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. திருவள்ளூரை அடுத்த தொட்டிக்கலை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி அளவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர்.

அப்போது ஒரு வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்த பட்டனை அழுத்திய போது அதில் இருந்த அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு இருந்த தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு தாமதம்

அவர்கள் பார்த்த போது அந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் பூந்தமல்லியில் இருந்து புதிய வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்