மாவட்ட செய்திகள்

ஏரியூர் அருகே வெடி பொருட்கள் வெடித்து சிதறி தொழிலாளி படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஏரியூர் அருகே வெடி பொருட்கள் வெடித்து சிதறி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சின்னவத்தலாபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 47), தொழிலாளி. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு பின்புறம் உள்ள பாறைகளை வெடி வைத்து அப்புறப்படுத்துவதற்காக ஜெலட்டின், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிமருந்துகளை வாங்கி வந்து வீட்டின் ஒரு பகுதியில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ராமசாமி வெடி பொருட்களை எடுத்துள்ளார். அப்போது திடீரென வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் ராமசாமிக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து கிடந்த ராமசாமியை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏரியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்